

சேலம் மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள நச்சுத் தொட்டிகளை சுத்தம் செய்ய குறைந்த கட்டணத்திலான நச்சு கழிவு அகற்றும் வாகன சேவையை பயன்படுத்திக் கொள்ள மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் பொது மக்கள் தங்களது வீடுகளில் உள்ள நச்சுத் தொட்டிகளை சுத்தம் செய்திட குறைந்த கட்டணத்திலான நச்சு கழிவு அகற்றும் மாநகராட்சி வாகன சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணமாக நடை ஒன்றுக்கு ரூ.1,200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி தலைமை அலுவலகத்தை 0427-2212844, சூரமங்கலம் வார்டு அலுவலகத்தை 0427-2387514, 8754737433, அஸ்தம்பட்டி வார்டு அலுவலகத்தை 0427-2310095, 9443942914, அம்மாப்பேட்டை வார்டு அலுவலகத்தை 0427-2263161, 8012354463, கொண்டலாம்பட்டி வார்டு அலுவலகத்தை 0427–2216616, 9791335164 ஆகிய தொலைப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.