பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்

பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு  விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
Updated on
1 min read

நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பேசியதாவது: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சத்தான உணவு, விலையில்லா புத்தகப் பை, காலணி, பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, சீருடை, மடிக்கணினி, பேருந்துப் பயண அட்டை உள்ளிட்டவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது.

2020-21ம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 52 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 2,056 மாணவர்கள், 2,665 மாணவிகள் என மொத்தம் 4,721 பேருக்கு ரூ.1.86 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.

மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் கப்பச்சி டி.வினோத், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நசாருதீன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in