பெண்களை இழிவாக பேசியதாக கூறி ஸ்டாலின், உதயநிதியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பெண்களை இழிவாக பேசியதாககூறி திமுக தலைவர் ஸ்டாலின், உதய நிதி ஆகியோரை கண்டித்து அதி முகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிதம்பரத்தில் கடலூர் கிழக்குமாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அதிமுக மகளிரணி துணை செயலாளரும் பண்ருட்டி சட்டமன்ற உறுப் பினருமான சத்யாபன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செல்வி ராமஜெயம், கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாவட்ட செயலாளர் கள் மாரிமுத்து, செல்வராஜ், மாவட்ட அவைத்தலைவர் குமார்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், சிதம்பரம் வேளாண் விற்பனை சங்க தலை வர் டேங்க் சண்முகம், ஒன்றிய கழக செயலாளர்கள் ராசாங்கம், அசோகன், சுந்தரமூர்த்தி, வாசுமுருகையன் மற்றும் மகளிரணியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கண்டித்து முழுக் கங்கள் எழுப்பப்பட்டது.

விழுப்புரம்

ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்பி செஞ்சிஏழுமலை, இளைஞரணி செயலா ளர் பசுபதி,திண்டிவனம் முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், கண்ணன், விநாயகமூர்த்தி மற்றும் ஜானகிராமன், திருப்பதி பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in