Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM
மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மூலம், சுகாதாரத் தில் மிக உயர்ந்த தரத்துடன் இயங்கும்மருத்துவமனைகளுக்கு ஆண்டுதோ றும் ‘காயகல்ப் விருதுகள்’ வழங்கப்படு கிறது.
ஜிப்மர் மருத்துவமனை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மத்திய அரசு மருத்துவமனைகளுக்கான பிரிவில் இந்த விருதை வென்றுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இந்த விருதை காணொலி மூலம் நேற்றுமுன்தினம் வழங்கினார்
இதனை ஜிப்மர் இயக்குநர் மருத்து வர் ராகேஷ் அகர்வால், மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அசோக் சங்கர் படே, இணை இயக்குநர் (நிர்வாகம்) அப்துல் ஹமித், கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் அனிதா ரஸ்தகி, சுனில் ஜாதவ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
ஜிப்மர் 2018-19 ஆம் ஆண்டில் இரண்டாவது இடத்திற்கான விரு தையும், 2017-18 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்திற்கான விருதையும் தொடர்ந்து பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!