

விழுப்புரம் அருகே கொலை வழக்கில் 12 ஆண்டுகளாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே கண்டம் பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆறுமுகம் 2006-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த கண்டம்பாக்கத்தைச் சேர்ந்த இளையராஜா (38) என்பவர் வழக்கில் ஆஜர் ஆகாமல் தலைமைறைவானார். அவர் மீது விழுப்புரம் குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. 12 ஆண்டுகளாக வழக்கில் ஆஜராகாத இளையராஜா திருமணமாகி பெங்களூரில் கொத்தனார் வேலை செய்து வந்தார். விழுப்புரம் தாலுகா குற்றப்பிரிவு போலீஸார் நேற்று அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கடலூர் மத்திய சிறையிலடைத்தனர்.