அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
Updated on
1 min read

காஞ்சி ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமூக நலத் துறை சார்பில் நடப்பு ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தோருக்கு அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளது. இவ்விருது மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தின விழா கொண்டாட்டத்தின்போது வழங்கப்படும்.

இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயதுக்குமேற்பட்டவராக இருக்க வேண்டும். சமூக நலன் சார்ந்து, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டிருக்க வேண்டும். மொழி, இனம், பண்பாடு,கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் பெண் முன்னேற்றத்துக்கு தொண்டாற்றுபவராக இருக்க வேண்டும்.

தங்கள் விண்ணப்பத்துடன் தகுந்த ஆவணங்களை இணைத்து காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலத் துறை அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in