தென்காசி, நெல்லையில் பரவலாக மழை குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. (வலது) திருநெல்வேலியில் நேற்று அதிகாலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்தது. நேற்று மாலை 5 மணி தொடங்கி மழையில் குளிர்ந்தது மாநகரம். பெருமாள்புரம் 60 அடி சாலையில் மழையில் விரைந்த வாகனங்கள். படம்: மு.லெட்சுமி அருண்
தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. (வலது) திருநெல்வேலியில் நேற்று அதிகாலையில் இருந்தே விட்டுவிட்டு மழை பெய்தது. நேற்று மாலை 5 மணி தொடங்கி மழையில் குளிர்ந்தது மாநகரம். பெருமாள்புரம் 60 அடி சாலையில் மழையில் விரைந்த வாகனங்கள். படம்: மு.லெட்சுமி அருண்
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரிப்பு காரணமாக கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று அதிகாலையில் இருந்து மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. பகலிலும் அவ்வப்போது மிதமான மழை பெய்தது.

நேற்று காலை 8 மணி வரையான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 13.20 மி.மீ. மழை பதிவனது. ஆய்க்குடியில் 8.60, ராமநதி அணையில் 8, குண்டாறு அணையில் 7, சங்கரன்கோவிலில் 3, செங்கோட்டை, கருப்பாநதி அணை, சிவகிரியில் தலா 1 மிமீ மழை பதிவானது.

கடனாநதி அணை நீர்மட்டம் 81 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 78 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 63.32 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 78 அடியாகவும் இருந்தது. மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

அதிகபட்சமாக பாபநாசம், மணிமுத்தாறு அணைப்பகுதிகளில் தலா 6 மி.மீ மழை பதிவாகியிருந்தது. பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): சேர்வலாறு- 3, அம்பா சமுத்திரம்- 2, சேரன்மகாதேவி- 4, நாங்குநேரி- 3.50, பாளையங் கோட்டை- 1, ராதாபுரம்- 3, திருநெல்வேலி- 2.50.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியாக இருந்தது. 734 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 110 அடியாக இருந்தது. 309 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. 480 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு நீர்மட்டம் 140.52 அடியாகவும், 49 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 28 அடியாகவும், 22.96 அடி உச்சநீர்மட்டம் கொண்ட நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும், 52.50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட கொடுமுடியாறு நீர்மட்டம் 24.75 அடியாகவும் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in