‘ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்’ :

‘ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்’ :

Published on

நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் ஆடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித்தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றநிலையில் உள்ள பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும்திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில் ரூ.76.63 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் 400 பயனாளிகளுக்கு தலா 5 வெள்ளாடுகள் மற்றும் செம்மறிஆடுகள் வீதம் 2,000 ஆடுகள்வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்கள், 60 வயதுக்கு உட்பட்டவராகவும், சொந்தமாக நிலம் மற்றும் கால்நடைகள் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். அவரவர் வசிக்கும் பகுதியின் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் வரும் 9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in