

திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (35). இவரது மனைவி ஜோதி(30), இவர்களுடன் சில பள்ளி மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பத்துார் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் சொரக்கல் நத்தம் அடுத்த புலிக் கொள்ளை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திம்மராயன் மற்றும் அவரது சகோதரர் முனிராஜ் ஆகிய இருவரும் அங்குள்ள பொது சாலையை ஆக்கிரமித்து, பொதுமக்கள் சென்று, வர வழி விடாமல் தகராறில் ஈடுபடுகின்றனர்.
இதனால், பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவர்களாகிய நாங்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம்.
இது குறித்து திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்தும் காவல் துறையினர் அவர்கள் மீது எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. திம்மாம்பேட்டை காவல் துறையின ருக்கு ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின் றனர். மேலும், ஆக்கிரமிப்பாளர் கள் எங்களை மிரட்டி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது வழியை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வர பாதையை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
பள்ளி மாணவர்களிடம் மனுவை பெற்ற ஆட்சியர் அலுவலக அதிகாரிகள், இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, பள்ளி மாணவர்கள் அங்கிருந்து சென்றனர்.