அடிப்படை வசதிகள் உள்ள இடத்தில் வீடுகள் கட்டித்தரக்கோரி - ஆட்சியர் அலுவலகம் முன்பு இலங்கை தமிழர்கள் தர்ணா : காவல் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்.
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட சின்னபள்ளிகுப்பம், மின்னூர் பகுதியில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு ஆம்பூர் வட்டத்தில் குடியிருப்புகள் கட்டித் தர இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், புதிய குடியிருப்புகள் கட்ட உள்ள இடத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை, ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி அங்கு எங்களை குடியமர்த்த வேண்டாம் எனக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை தமிழர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து இலங்கை தமிழர்கள் கூறும்போது, ‘‘எங்களுக்கு ஆம்பூர் வட்டம் காட்டுக்கொல்லை மற்றும் காளிகாபுரத்தில் புதிய குடியிருப்பு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இங்கு மின்னூர் பகுதி மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்கள், எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையும் மீறி எங்களை அங்கு குடியேற சொன்னால் பலவிதமான இடையூறுகள் எங்களுக்கு ஏற்படும். மேலும், ஊர் மக்களின் எதிர்ப்பை மீறி எங்களால் அங்கு நிம்மதியாக வசிக்கவும் முடியாது.

மேலும், புதிய குடியிருப்புப் பகுதிமலையடிவாரத்தில் கட்டப்பட உள்ளதாக தெரிகிறது. அங்கு கல்குவாரி உள்ளது. மயான வசதி இல்லை.

நாங்கள் தற்போது குடியிருக்கும் இடத்தில் இருந்து சுமார் 15 கி.மீ., தொலைவில் அந்த இடம் உள்ளதால் எங்களால் எளிதாக அங்கு சென்று குடியேற முடியாத நிலை உள்ளது. எனவே, காட்டுக்கொல்லை, காளிகாபுரம் பகுதியில் எங்களுக்கு குடியிருப்புகள் வேண்டாம் என ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கெனவே மனு அளித்துள்ளோம்.

இது தொடர்பாக அதிகாரி களிடம் முறையிட்டால் அரசு தேர்வு செய்யப்பட்ட இடத்தை வேண்டாம் எனக்கூறும் நீங்கள் அரசு வழங்கும் எந்த உதவியும், சலுகையும் வேண்டாம் என எழுதிக்கொடுங்கள் எனக்கூறி எங்களை மிரட்டுகின்றனர். ஆகவே, பாதுகாப்பான, அடிப் படை வசதிகள் உள்ள வேறு இடத்தில் எங்களுக்கு குடியிருப்பு களை அமைத்துத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறோம்’’ என்றனர்.

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த காவல் மற்றும் வருவாய்த் துறை யினர் அவர்களி டம் பேச்சு வார்த்தை நடத்தி அவர் களை அனுப்பி வைத் தனர். இதை யடுத்து, ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர்கள் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in