பரங்கிமலை ராணுவ மையத்தில் சாகச நிகழ்ச்சி :

பரங்கிமலை ராணுவ மையத்தில் சாகச நிகழ்ச்சி :
Updated on
1 min read

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், பயிற்சி முடித்த அதிகாரிகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன.

முதலில் அதிகாரிகளின் ஜிம்னாஸ்டிக் நிகழ்ச்சியும், தொடர்ந்து, உடற்பயிற்சி நிகழ்ச்சியும், பின்னர், கேரளாவின் புகழ்பெற்ற தற்காப்புக் கலையான களறியும் நடைபெற்றது.

நெருப்பு வளையத்துக்குள் தாண்டுதல், மனித கோபுரம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளையும் இளம் அதிகாரிகள் நடத்திக் காட்டினர். இந்த சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இந்நிகழ்ச்சியில், பயிற்சி மையத்தின் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் எம்.கே.தாஸ், பயிற்சி அதிகாரிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in