கார் மோதி முதியவர் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்  :

கார் மோதி முதியவர் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல் :

Published on

பெரம்பலூர் மாவட்டம், குரும் பலூர் அண்ணாநகர் பகுதி யைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் சீனிவாசன்(60).

ஆடு மேய்க்கும் தொழிலாளி யான இவர், நேற்று காலை வல்லாபுரம் கிராமத்திலிருந்து பெரம்பலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண் டிருந்தார். திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் வந்துகொண் டிருந்தபோது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார், எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சீனிவாசன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து விபத்து நிகழும் இப்பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காத போலீ ஸாரைக் கண்டித்து சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய பிரகாசம் மற்றும் போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட் டதையடுத்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டம், கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த நாத் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in