சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மனுத்தாக்கல் :

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மனுத்தாக்கல் :

Published on

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக் குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜராகவில்லை. அமைச்சர் பொன்முடி தற்போது அமைச்ச ராக இருப்பதால் மக்கள் பணியை கவனிக்க வேண்டியுள்ளதால், இவ்வழக்கில் நேரில் ஆஜராவ தில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அவரது வழக்கறிஞர்கள் மனுத்தாக்கல் செய்தனர். நீதிபதி பூர்ணிமா, இதன் மீதான விசாரணை நாளை (இன்று) நடைபெறும் எனக்கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in