திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் - கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் :

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்தின்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகன் தெய்வானை.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்தின்போது சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகன் தெய்வானை.
Updated on
1 min read

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங் கியது.

திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி கோயி லில் கார்த்திகை தீபத் திரு விழாவை முன்னிட்டு உற்சவர் சன்னதியிலிருந்து முருகப்பெரு மான், தெய்வானை புறப்பாடாகி கம்பத்தடி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். தங்க முலாம் பூசப்பட்ட கொடிமரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. கொடிமரம், முருகப்பெருமான், தெய்வானைக்கு பின்னர் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நவ.18-ம் தேதி மாலையில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து நவ.19-ம் தேதி மாலையில் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். நவ.20-ம் தேதி தீர்த்தத்துடன் கார்த்திகை தீபத்திருவிழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மு.ராமசாமி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in