திருவையாறு அருகேவயலில் விவசாயி சந்தேக மரணம் :

திருவையாறு அருகேவயலில் விவசாயி  சந்தேக மரணம் :
Updated on
1 min read

திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சி.பாலமுருகன்(45). இவர், கண்டியூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தில் தற்போது சம்பா நெற்பயிர் நடவு செய்திருந்தார்.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாலமுருகன் நடவு செய்த வயல் முழுவதும் மழைநீர் தேங்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது மனைவி மரகதத்திடம் மழைநீரால் நெற்பயிர் வீணாகியதாகவும், இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய பாலமுருகன், வயலுக்கு சென்றுவிட்டு வருகிறேன் எனக் கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து நேற்று காலை மரகதம் வயலுக்கு சென்று பார்த்தபோது, அங்கு பாலமுருகன் சந்தேகமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து நடுக்காவேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in