பி.எப். உறுப்பினர்களுக்காக : 10-ம் தேதி குறைதீர்வு கூட்டம் :

பி.எப். உறுப்பினர்களுக்காக : 10-ம் தேதி குறைதீர்வு கூட்டம் :
Updated on
1 min read

வருங்கால வைப்பு நிதி செலுத்தும் உறுப்பினர் களுக்கான குறை தீர்வு கூட்டம் கூட்டம் வரும் 10-ம் தேதி காணொலி காட்சி மூலம் நடைபெறுகிறது என பிஎப் மண்டல ஆணையர் ரிதுராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வருங்கால வைப்பு நிதி செலுத்தும் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தை சேர்ந்தோர் களுக்கான குறைதீர்வு கூட்டம், மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் மற்றும் இதர அலுவலர்கள் முன்னிலையில் காணொலி காட்சி மூலம் வரும் 10-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

இதற்கான இணைப்பு (Link) http://meet149.webex.com/meet/pr26428011337 ஆகும். எனவே, உறுப்பினர்கள் தங்களது பெயர், வருங்கால வைப்பு நிதி எண், ஓய்வூதிய எண் உள்ளிட்ட விவரங்களுடன் தெளிவாக எழுதி வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம், எஸ்-4, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ்-3, சத்துவாச்சாரி, வேலூர்-632009 என்ற முகவரிக்கு வரும் 8-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், உறுப்பினர்கள் தங்களது குறைகளை 0416-2906001/5 என்ற எண்ணிலும், ro.vellore@epfindia.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்’’என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in