Published : 02 Nov 2021 03:10 AM
Last Updated : 02 Nov 2021 03:10 AM

விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு :

விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் கடந்த 18 மாதங்களாக மூடப்பட்ட பள்ளிகள் தமிழகம் முழுவதும் நேற்று திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக நேற்று விடுமுறை அளித்து ஆட்சியர் மோகன் உத்தவிட்டார்.

இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா வெளியிட்டுள்ள வாய்ஸ் மெசேஜில், மழையின் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்புவரை பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. எப்போது திறக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு பின் வரும் 8-ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 முதல் 8-ம் வகுப்புவரை தீபாவளிக்கு பின் வரும் 8-ம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x