

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கடந்த 4 நாட்களாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையால் சம்பவ பருவ சாகுபடியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் தீபாவளி பண்டிகையை யொட்டி சாலையோரம் போடப்பட்டிருந்த கடை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.