

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் இருவரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர் ஒருவரை சக மாணவர் பாட்டிலால் குத்தினார். இதில் காயமடைந்த மாணவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர் மீது அலங்காநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.