

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பில் தீரன் தொழிற்சங்க பேரவை பெயர்ப் பலகை திறப்பு விழா நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பெயர்ப் பலகையை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
போக்குவரத்து துறையில் காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பல வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க வேண்டும்.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என்ற பேச்சுக்கே இடமில்லை.
பாஜக தலைவர் அண்ணாமலை, சொல்லும் குற்றச்சாட்டுகளை நாகரீகமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
கொங்கு பகுதிக்கான கோரிக்கைகளை முதல்வர் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். 50 ஆண்டு கோரிக்கை திட்டமான நீர்ப்பாசனத் திட்டத்தை நிறைவேற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.