இடிந்து விழுந்த - தெப்பக்குள சுற்றுச்சுவர் பகுதியில் சவுக்குக்கட்டை தடுப்பு அமைப்பு :

இடிந்து விழுந்த -  தெப்பக்குள சுற்றுச்சுவர் பகுதியில் சவுக்குக்கட்டை தடுப்பு அமைப்பு :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலுக்கு எதிரில் உள்ள தெப்பக்குளத்தின் மேற்கு கரையில் கோயிலுக்கும், அதைத் தொடர்ந்துள்ள தெருக்களுக்கும் செல்லும் பிரதான சாலை உள்ளது.

இந்த சாலையின் ஓரத்தில் இருந்த குளத்தின் சுற்றுச்சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே மிகவும் சேதமடைந்திருந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்துவிழுந்தது. இதையடுத்து, சேதமடைந்த பகுதியை இந்துசமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.

இதைத் தொடர்ந்து, குளத்தின் மேற்கு கரையில் சுற்றுச்சுவர் அமைந்துள்ள பகுதி முழுவதும் (இடிந்து விழுந்த பகுதியையும் சேர்த்து) பொதுமக்கள் செல்லாதவாறு, அறநிலையத் துறை சார்பில் நேற்று சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in