கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை கண்டித்து - இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் :

கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை கண்டித்து கோவை காந்தி புரத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி அமைப்பினர். படம்:ஜெ.மனோகரன்
கோயில் நகைகளை உருக்கும் திட்டத்தை கண்டித்து கோவை காந்தி புரத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி அமைப்பினர். படம்:ஜெ.மனோகரன்
Updated on
1 min read

கோயில் நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்தை கைவிடக்கோரி இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம்முனியப்பன் கோயில் அருகில்நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து முன்னணியின் மாநில செயலாளர் ஜெ.எஸ்.கிஷோர் குமார் தலைமைவகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அலகு குத்தி, கடவுள் வேடம் அணிந்து பலர் கலந்துகொண்டனர். இதில், மாவட்ட தலைவர் கே.தசரதன், கோட்ட செயலாளர் எஸ்.சதீஷ், கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் எம்.ஜெய்சங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால், மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, ஆனந்த், மகேஸ்வரன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, திருப்பூர் மாந கராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் கிஷோர் குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்று தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in