Published : 25 Oct 2021 03:08 AM
Last Updated : 25 Oct 2021 03:08 AM

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 பேர் கைது :

திருப்பூர் மாவட்டத்தில் பெருமா நல்லூர், மூலனூர், அவிநாசிபாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாக திருப்பூரை சேர்ந்த ஹரி கணேஷ் (21), கண்ணப்பன் (35), முத்துசாமி (77) ஆகிய மூவர் சமீபத்தில் மாவட்ட தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் பரிந்துரையின்பேரில், மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

உத்தரவுக்கான நகல்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரிடமும் அளிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x