சிவகங்கை அருகே - 100 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை வெட்டி கடத்தல் :

சிவகங்கை அருகே சோனைப்பட்டியில் ஆலமரத்தை வெட்டி வாகனத்தில் ஏற்றப்பட்ட மரக்கட்டைகள்.
சிவகங்கை அருகே சோனைப்பட்டியில் ஆலமரத்தை வெட்டி வாகனத்தில் ஏற்றப்பட்ட மரக்கட்டைகள்.
Updated on
1 min read

சிவகங்கை அருகே 100 ஆண்டுகள் பழமையான ஆல மரம் வெட்டி கடத்தப்பட்டதாக கிராம இளைஞர்கள் புகார் தெரி வித்துள்ளனர்.

சிவகங்கை அருகே அழகிச்சிப் பட்டி ஊராட்சி சோனைபட்டி தண்டூரணிக் கரையில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான ஆல மரம் இருந்தது. இந்நிலையில் விளைநிலத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, சிலர் ஆலமரத்தின் பெரும் பகுதியை வெட்டியுள்ளனர்.

மேலும் இதில் கிடைத்த விறகுகளை வாகனத்தில் கடத்தியுள்ளதாக அப்பகுதி கிராம இளைஞர்கள் புகார் தெரி வித்துள்ளனர்.

இதுகுறித்து சோனைப்பட்டி கிராம இளைஞர்கள் கூறுகை யில், எங்கள் கிராமத்தின் அடை யாளமாக ஆலமரம் இருந்தது. சாலையோரத்தில் இருந்த ஆல மரத்தை வெட்டி கடத்தியுள்ளனர்.

இதுகுறித்து புகார் கொடுத்தும் வருவாய்த் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றனர்.

இதுகுறித்து சிவகங்கை வட்டாட்சியர் தர்மலிங்கம் கூறுகையில், ஆலமரத்தை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in