8 ஆண்டுகளாக புதைசாக்கடையை அனுமதியின்றி பயன்படுத்திய - 2 தங்கும் விடுதி, மதுக்கூடத்துக்கு ரூ.1.09 கோடி அபராதம் : தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே 2 தங்கும் விடுதிகள், ஒரு மதுபான பாரில் இருந்து மாநகராட்சிக்கு சொந்தமான புதைசாக்கடைக்கு அனுமதியின்றி இணைப்பு கொடுக்கப்பட்ட கழிவுநீர் குழாய்களை பொக்லைன் மூலம் அகற்றும் மாநகராட்சி அதிகாரிகள்.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே 2 தங்கும் விடுதிகள், ஒரு மதுபான பாரில் இருந்து மாநகராட்சிக்கு சொந்தமான புதைசாக்கடைக்கு அனுமதியின்றி இணைப்பு கொடுக்கப்பட்ட கழிவுநீர் குழாய்களை பொக்லைன் மூலம் அகற்றும் மாநகராட்சி அதிகாரிகள்.
Updated on
1 min read

தஞ்சாவூரில் அனுமதியின்றி மாநகராட்சி புதைசாக்கடையை 8 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த 2 தங்கும் விடுதிகள், ஒரு மதுபான பாருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.1.09 கோடி அப ராதம் விதித்தனர்.

தஞ்சாவூர் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக 51 வார்டுகளிலும் புதைசாக்கடை திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாநகரில் 4 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, சமுத்திரம் ஏரிப் பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவு நீர் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஊராட்சி பகுதிகளில் கட்டப்பட் டுள்ள உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள், மாநகராட்சிக்கு சொந்தமான புதைசாக்கடைக்கு சட்டவிரோதமாக இணைப்பு கொடுத்து, கழிவுநீரை வெளியேற்றி வருவதாக மாநகராட்சி நிர்வாகத் துக்கு தகவல் கிடைத்தது. இதைய டுத்து, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், செயற்பொறி யாளர் ஜெகதீசன் ஆகியோர் புகார் வந்த இடங்களை ஆய்வு செய்தனர்.

இதில், நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலை யத்தின் தென்பகுதியில் உணவகத் துடன் கூடிய 2 தங்கும் விடுதிகள் மற்றும் ஒரு மதுபான பார் ஆகி யவை, அருகில் உள்ள மாநகராட் சிக்கு சொந்தமான புதைசாக்கடை குழாயில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இணைப்பு கொடுத்து, தங்களின் கழிவுநீரை கடந்த 8 ஆண்டுகளாக வெளி யேற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் தலைமையிலான பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு பொக் லைன் மூலம் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கழிவுநீர் குழாய் களை அகற்றினர்.

தொடர்ந்து, கடந்த 8 ஆண்டு களாக மாநகராட்சியின் அனுமதி யின்றி புதைசாக்கடையைப் பயன்படுத்தி வந்த 2 தங்கும் விடுதிகள் மற்றும் மதுபான பாருக்கு ரூ.1.09 கோடி அபராதம் விதித்து, அதற்கான நோட்டீஸை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in