பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் - நிகழாண்டு அரைவையை டிச.10-ல் தொடங்க முடிவு :

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் -  நிகழாண்டு அரைவையை டிச.10-ல் தொடங்க முடிவு :
Updated on
1 min read

பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம், சர்க்கரை ஆலை கூட்ட அரங்கில் தலைமை நிர்வாகி என்.கதிரேசன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்தில், தலைமைக் கரும்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணை தலைமை ரசாயனர் பெரியசாமி, துணை தலைமைப் பொறியாளர்(பொ) நாராயணன், கணக்கு அலுவலர் ஜான்பிரிட்டோ, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், 2021-22-ம் ஆண்டுக்கான அரைவைப் பருவத்தை டிச.10-ம் தேதி தொடங்கி, 107 நாட்கள் அரைவையை நடத்தி, 6-4-2022-ல் அரைவையை முடிப்பது என ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு எத்தனால் தயாரிக்கும் ஆலையை அரசு கொண்டுவர வேண்டும். இதர சர்க்கரை ஆலைகள் பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு தரவேண்டிய பாக்கித்தொகையை உடனே பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இணை மின் திட்டத்துக்கு விவசாயிகளிடம் பெறப்பட்ட பங்குத்தொகைக்கு பத்திரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in