மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தும் - நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் :

மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தும் -  நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் :
Updated on
1 min read

அனைத்து தனியார் நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் 5 சதவீதம்அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறனாளி பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படும். அந்த வகையில் அதிக அளவு மாற்றுத்திறனாளி பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்களால் பணியாளர்களுக்கு வழங்கப்படும் வருங்கால சேமிப்பு நலநிதிமற்றும் காப்பீட்டுத் தொகைஆகியவற்றுக்காக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய பங்குத்தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் வழங்கும் துறை செலுத்தும்.

மேலும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடையில் நிறுவனங்கள் செலுத்தும் தொகையில் 3-ல் 1 பங்கு தொகையை இந்தத்துறை செலுத்தும். தனியார் நிறுவனமானது மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் சிறப்பான தொழிற்பயிற்சி அளித்து பணியில்சேர்த்துக் கொண்டால் அந்தபயிற்சி காலத்துக்கான உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் இயங்கிவரும் அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இத்திட்டத்தில் பயனடையலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in