மரத்தில் வாகனம் மோதியதில் வியாபாரி உட்பட 2 பேர் உயிரிழப்பு :

மரத்தில் வாகனம் மோதியதில் வியாபாரி உட்பட 2 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் விக்கரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (30). ஊறுகாய் வியாபாரி. அவரிடம் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் குருவிநாயனப்பள்ளி அடுத்த பசவண்ணகோயில் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜேந்திர ராவ் (57) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று ஊறுகாய் வாங்குவதற்காக ஆந்திரா மாநிலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

வாகனத்தை கார்த்திகேயன் ஓட்டினார். பிற்பகல் 3 மணியளவில் கிருஷ்ணகிரி - குப்பம் தேசிய நெடுஞ் சாலையில் சின்னமட்டாரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் தூக்கிவீசப்பட்ட கார்த்திகேயன், ராஜேந்திரராவ் ஆகியோர் படுகாயங்களுடன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in