நாளை மினி மாரத்தான் போட்டி :

நாளை மினி மாரத்தான் போட்டி :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் நாளை (அக்.24) ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. ஆண்களுக்கான 7 கி.மீ தூர தொலைவு மினி மாரத்தான் போட்டி காலை 6 மணிக்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில் இருந்து புறப்படும். பெண்களுக்கான 5 கி.மீ தூர மினி மாரத்தான் போட்டி காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி தருவை மைதானத்தில் புறப் படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள் மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை அலுவ லகத்தில் நேரிலோ அல்லது 0461 231 0351 என்ற தொலைபேசி எண்ணிலோ இன்று (அக்.23) மாலை 4 மணிவரை பதிவு செய்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in