Regional03
மேட்டூர் அணை நீர்மட்டம் 94 அடியானது :
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.20 அடியாக உயர்ந்தது.
கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் மற்றும் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கும் கூடுதலாக தண்ணீர் வரத்து உள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரத்து 409 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 10 ஆயிரத்து 559 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 100 கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 550 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நீர் வெளியேற்றத்தை விட, நீர்வரத்து அதிகமாக இருப்பதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 93.50 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 94.20 அடியாக உயர்ந்தது. நீர்இருப்பு 57.58 டிஎம்சி-யாக உள்ளது.
