திண்டுக்கல்லில் பூட்டிய கதவை திறக்க தெரியாமல் தவித்த குழந்தை மீட்பு :

திண்டுக்கல்லில் பூட்டிய கதவை திறக்க தெரியாமல் தவித்த குழந்தை மீட்பு :

Published on

திண்டுக்கல் விவேகானந்தா நகரில் வீட்டின் முதல் தளத்தில் வசிப்பவர் முகமது அசாருதீன். இவரது மனைவி இர்பான் பதான். இவர்களது ஒன்றரை வயது குழந்தை அஸ்ஹாஸ் இஜ்யான். நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தது. தாயார் வீட்டுக்கு வெளியே நின்றார். குழந்தை வீட்டின் உள்ளே சென்று கதவை சாத்தியது. ஆட்டோ லாக் என்பதால் கதவு மூடிக் கொண்டது.

இதனால் குழந்தை வீட்டுக்குள் சிக்கியது. அக்கம்பக்கத்தினர் முயற்சித்தும் கதவைத் திறக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவி்க்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் கதவை உடைக்காமலேயே குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in