

நாமக்கல்லில் நேற்று முன்தினம் 32 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு வேளையில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் வெப்பம் தணிந்து குளுகுளு சூழல் நிலவி வருகிறது. நேற்று காலை வரை மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.,):
நாமக்கல் 32.5, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 9.5, திருச்செங்கோடு 9, சேந்தமங்கலம், குமாரபாளையம் தலா 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே தொடர் மழையால் சாலையின் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இவற்றில் கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ளால் அவற்றை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.