மதிமுகவில் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் : திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

மதிமுகவில் துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்க வேண்டும் :  திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
Updated on
1 min read

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி - கரூர் பைபாஸ் சாலையிலுள்ள மண்ணச்சநல்லூர் நடராசன் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

மாநில விவசாய அணி செயலாளர் புலவர் முருகேசன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் டிடிசி.சேரன் முன்னிலை வகித்தார். அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் மைக்கேல்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் ஜெயபால், மாவட்டப் பொருளாளர் துரையரசன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ், ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ சின்னப்பா கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில், மதிமுக தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்க வழி செய்யும் வகையில் துரை வைகோவுக்கு கட்சியில் இணைந்து செயல்பட, அவருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தகுந்த பொறுப்பை வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல மதிமுக மாநில, மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் ரொஹையா தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நலன்கருதி துரை வைகோவுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கி கட்சியை வலுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in