சுரங்கப்பாதை பணியை விரைவுபடுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் :

சுரங்கப்பாதை பணியை விரைவுபடுத்தக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் கையெழுத்து இயக்கம் :
Updated on
1 min read

திண்டுக்கல் - கரூர் சாலையில் ரயில்வே லைனை கடந்துசெல்ல அமைக்கப்படும் சுரங்கப் பாதை பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் திண்டுக்கல் நகர்க் குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மாநில குழு உறுப்பினர் என்.பாண்டி தொடங்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆசாத், பாலசந்திரபோஸ், நகரச் செயலாளர் அரபுமுகமது, நகர்க்குழு உறுப்பினர்கள் கணேசன், தவக்குமார், விஷ்ணுவர்தன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் கையெழுத்துப் பெற்றனர்.

மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கூறுகையில், மழைக் காலம் என்பதால் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது. நீரை வெளியேற்றாமலும், கட்டுமானப் பணிகளை முடிக்காமலும் நெடுஞ்சாலைத் துறையினர் தாமதித்து வருவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி இப்போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in