

பழநியில் பிஹார் இளைஞர் கடத்திச் சென்ற சத்தீஸ்கர் சிறுமியை மீட்கக்கோரி எஸ்.பி.யிடம் சிறுமியின் பெற் றோர் புகார் மனு அளித்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சாபிராம் மிரி, ராதிகா மிரி தம்பதி, பழநி அருகே புஷ் பத்தூரில் மில்லில் பணி புரிந்து வருகின்றனர்.
இவர்களது 11 வயது மகளை அதே மில்லில் வேலை பார்த்து வந்த பிஹாரைச் சேர்ந்த திலீப்குமார் (25) கடத்திச் சென்றுவிட்டதாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதையடுத்து சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனி வாசன் உத்தரவிட்டார்.