Published : 17 Oct 2021 03:08 AM
Last Updated : 17 Oct 2021 03:08 AM

காவல்துறையினருக்கு முதலுதவி சிகிச்சை பயிற்சி :

விழுப்புரத்தில் காவல்துறையி னருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று காவல்துறையினருக்கு மருத்துவர் ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினர் விபத்தில் சிக்கிக்கொள்வோருக்கு எவ்வாறு முதலுதவி அளிப்பது என பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியை எஸ்பி நாதா தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் அடிப்படை உயிர்காக்கும் திறமைகள் குறித்த முதலுதவி பயிற்சியான இருதயம், நுரையீரல் உள்ளிழத்தல் எனப்படும் சிபிஆர் ( Cardiopulmonary resuscitation) பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x