Published : 17 Oct 2021 03:09 AM
Last Updated : 17 Oct 2021 03:09 AM

ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் கோயில்களில் - தல மரக்கன்றுகளை நட்ட அமைச்சர் அர.சக்கரபாணி :

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் குழந்தைவேலப்பர் கோயில் மற்றும் கள்ளிமந்தயம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தல மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். தல மரக்கன்றுகளை அமைச்சர் அர.சக்கரபாணி நட்டார். அதைத்தொடர்ந்து கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் ஆகியவற்றின் சார்பில் செயல்படுத்தப்படும் பொது இடங்களில் புளிய மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது: வனப்பகுதியை அதிகரிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அந்தந்த தலத்துக்கான தல மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். கள்ளி மந்தயம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 14 ஏக்கரில் 50,000 மரக்கன்றுகளை திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் நிறுவனம் நட்டு பராமரித்து வருகிறது. ஒட்டன்சத்திரம் தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் வகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது என்று பேசினார்.

நிகழ்ச்சியில், திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் நிர்வாக இயக்குநர் அனிதா சேகர், வனப்பரப்பியல் நிறுவன இயக்குநர் குன்னி கண் ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x