

கோவை குனியமுத்தூர் செல்வம் நகரைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி உமாமகேஸ்வரி(65). நேற்று முன்தினம் இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, 35 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் வீட்டுக்கு வந்தனர். தங்களை மாநகராட்சி அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இளைஞர்கள், ‘உங்களது இடத்தில் தான், உங்கள் வீட்டை கட்டியுள்ளீர்களா என அளவீடு செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளனர். தொடர்ந்து ஒரு இளைஞர்
மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருக்க, மற்றொரு இளைஞர் மூதாட்டிக்கு தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்து, பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் நகையை திருயுள்ளார். பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். சிறிது நேரம் கழித்து, மூதாட்டி பீரோவை திறந்து பார்த்த போது, நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, அவர் அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.