இளைஞர் கொலையில் தாய்மாமா கைது :

இளைஞர் கொலையில் தாய்மாமா கைது  :
Updated on
1 min read

சங்கரன்கோவில், கோமதியாபுரத்தைச் சேர்ந்த அருணாசலம் என்பவரது மனைவி முத்துமாரி. இவர், சங்கரன்கோவிலில் கூழ் கடை நடத்தி வருகிறார். இவரது மகன்கள் வைரமுத்து(29), தங்கமுத்து(28) ஆகியோர் முத்துமாரிக்கு உதவியாக இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அருணாசலம் இறந்துவிட்டார்.

இதனால் முத்துமாரியின் சகோதரர் செங்கோட்டையைச் சேர்ந்த அன்பழகன் கூழ் கடையில் வியாபாரத்துக்கு உதவி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அன்பழகன் தன்னையும் கூழ் கடையில் பங்குதாரராக சேர்க்கச் சொல்லி சகோதரி மற்றும் அவரது மகன்களிடம் வற்புறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, அன்பழகன் மற்றும் வைரமுத்துவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, கத்தியால் குத்தப்பட்டதில் வைரமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்து, அன்பழகன்(41), சங்குபுரத்தைச் சேர்ந்த அவரது நண்பர் நாராயணன் (33) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in