Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

டாஸ்மாக் கடைகள், பார்களுக்கு விடுமுறை :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்களுக்கு வரும் 19-ம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் உள்ள மதுபானக் கடைகள், பார்கள் மற்றும் உரிமம் பெற்ற ஓட்டல் பார்கள் அனைத்தும் வரும் 19-ம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு மூடியிருக்க வேண்டும். அன்றைய தினம் மதுபாட்டில் விற்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x