Published : 14 Oct 2021 05:58 AM
Last Updated : 14 Oct 2021 05:58 AM

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் :

வேலூர் மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் ஊசூர் அடுத்த சிவநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாமில் ரத்த அளவு பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பு அளவீடு, , கண்புரை ஆய்வு என 14 வகையான மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.

இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் பானுமதி உடனிருந்தார்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டத்தில் கே.வேளூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x