Published : 13 Oct 2021 05:49 am

Updated : 13 Oct 2021 05:49 am

 

Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM

மின்வாரியத்தில் தொழில் பழகுநர் பயிற்சி : ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு :

பொள்ளாச்சி: காடம்பாறை மின் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர் ரபீக் அகமது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொள்ளாச்சி அடுத்த காடம்பாறை மின் உற்பத்தி நிலையத்துக்கு உட்பட்ட அனைத்து மின்நிலையங்களுக்கும், தொழில் பழகுநர் பயிற்சிக்கு (அப்ரண்டிஸ்) ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எலக்ட்ரீசியன், வயர்மேன், பிட்டர்,வெல்டர் மற்றும் கணினி இயக்குபவர் பிரிவுகளில் ஐடிஐ பயின்று தேறியவர்கள், இப்பயிற்சி பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான நேர்காணல் வரும் 27-ம் தேதி காலை 10.30 மணிக்கு பொள்ளாச்சி - வால்பாறை சாலையில் உள்ள அட்டகட்டி காடம்பாறை மின்உற்பத்தி வட்ட மத்திய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தகுதியுள்ளவர்கள், தொழிற்பயிற்சி சான்றிதழ், தேசிய தொழில்நுட்ப சான்றிதழ், பிறந்த தேதிக்கான சான்றிதழ், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். ஏற்கனவே ‘அப்ரண்டிஸ்’ பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் நேர்காணலுக்கு வர வேண்டாம். தேர்வு செய்யப்பட்டால், ஓராண்டு காலத்துக்கு, ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 7709 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 94450 72286 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.





Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x