

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் வந்த மாநில உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியிடம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர் சங்க பொதுச் செயலாளர் கா.இளவரி கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதிய திட்டத்தை நுகர்பொருள் வாணிபக் கழகத்தினருக்கும் அமல்படுத்த வேண்டும். கொள்முதல் செய்யக்கூடிய நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. அப்போது, மாநில துணை பொதுச் செயலாளர் எஸ்.பாண்டியன், அமைப்புச் செயலாளர் பா.ராஜீவ் காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.