தஞ்சை மாவட்டத்தில் 840 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

தஞ்சை மாவட்டத்தில் 840 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் :
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளது: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (அக்.10) 5-வது மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமுக்காக 1.34 லட்சம் கரோனா தடுப்பூசி வரப்பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 57 சதவீதம் பேர், முதல் தவணை தடுப்பூசியும், 17 சதவீதம் பேர் 2-ம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

மேலும் மாற்றுத்திறனாளி கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு 56.5 சத வீதம் தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது. 60 வயதுக்கு மேற் பட்டவர்களில் 66 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது.

மாவட்டத்தில் கிராமப்புறப் பகுதிகளில் 721 இடங்களிலும், நகர்ப்புறப் பகுதிகளில் 119 இடங்க ளிலும் என மொத்தம் 840 இடங்க ளில் இன்று (அக்.10) தடுப்பூசி முகாம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, 3,360 பணியாளர் கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத் தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இம்முகாமை பயன்படுத்திக்கொண்டு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாவட்டமாக திகழ்ந்திட ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in