மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய மாநாடு :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய மாநாடு :
Updated on
1 min read

பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய முதல் மாநாடு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் பி.பெரியசாமி தலைமை வகித்தார். உறுப்பினர்கள் ஆர்.ஜெய லட்சுமி, எஸ்.கே.சரவணன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், எளம்பலூர் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக் கும் மக்களுக்கு இடையூறாக சிப்காட் நிறுவனத்தை விரிவுப டுத்தக் கூடாது. வெள்ளனூரில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு மாதவி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு 100 நாள் வேலை யும் அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in