திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை : 1,059 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் :

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை  : 1,059 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்  :
Updated on
1 min read

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 17,30,600 பேர் உள்ளனர். இவர்களில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 11,33,043 பேர். இது 65.5 சதவீதம் ஆகும். இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 3,16,540 பேர். இது 18.3 சதவீதம் ஆகும்.

தற்போது மாவட்டத்தில் மொத்தம் 91,570 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கரோனா தொற்று பாதிப்பு தினமும் 11 பேர் என்ற நிலையில் உள்ளது. மாவட்டத்தில் அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு பிஸ்கட் வழங்கப்படவுள்ளது. மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.அக்டோபர் 10-ம் தேதி 1,059 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in