Regional03
தேனியில் 100 ஏக்கர் நில மோசடி விவகாரம்? சிபிஐ விசாரணை கோரும் மார்க்சிஸ்ட் கட்சி :
தேனி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.வெங்க டேசன் வெளியிட்ட அறிக்கை:
தேனி அருகே வடவீர நாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி கிராமங்களில் கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்குச் சொந்தமான சுமார் 100 ஏக்கர் புறம்போக்கு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் சிலர் சம்பந்தப்பட்டுள்ளனர். அரசியல் செல்வாக்குள்ள பலருக்கும் இதில் தொடர்புள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
