சிவகங்கை அருகே மதகுபட்டியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்  கே.ஆர்.பெரியகருப்பன். அருகில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.
சிவகங்கை அருகே மதகுபட்டியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன். அருகில் மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.

மாநில வருவாயில் இருந்து - ஊராட்சிகளுக்கு 10 சதவீதம் நிதி ஒதுக்கீடு : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

Published on

ஊராட்சிகளுக்கு மாநில வருவாயில் இருந்து 10 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். பின்னர், சிவகங்கை அருகே மதகுபட்டியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் அமைச்சர், ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஆகியோர் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர். ஊராட்சித் தலைவர் சரஸ்வதி முத்துக்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:

ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிக்காக முதலில் மாநில வருவாயிலிருந்து 7 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. அது படிப்படியாக உயர்ந்து தற்போது 10 சதவீத நிதி வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலமாகவும் ஊராட்சிகள் வளர்ச்சி பெற்று வருகின்றன. தற்போது 14-வது நிதிக்குழு மானியம் மூலம் கிராமங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று கூறினார். அதன்பின், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன், கோட்டாட்சியர் முத்துக்கழுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in