Regional03
வளரிளம் பெண்களுக்கு சத்தான உணவு குறித்த பயிற்சி :
திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியவை இணைந்து, ஊட்டச்சத்து மாதத்தையொட்டி வளரிளம் பெண்களுக்கான சத்தான உணவு குறித்த பயிற்சியை பள்ளியில் நேற்று முன்தினம் நடத்தின. பள்ளித் தலைமையாசிரியர் குமுதா தலைமை வகித்தார். வட்டார திட்ட அலுவலர் கண்ணகி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், அரசு மருத்துவர் ஷகிலா, தோட்டக்கலை உதவி அலுவலர் சண்முகசுந்தரம் ஆகி யோர் வளரிளம் பெண்களுக்கு தேவையான சத்துகள் உள்ள உணவுகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஊட்டச்சத்து மிகுந்த உணவு தயாரிக்கும் முறையை அங்கன்வாடி பணி யாளர்கள் செய்து காண்பித் தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
