Published : 02 Oct 2021 06:42 AM
Last Updated : 02 Oct 2021 06:42 AM
திருப்பத்தூர் மாவட்டத்தில் தினசரி 20 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறையினருக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனை கள், ஆரம்ப சுகாதார நிலையங் கள், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில் கடந்த வாரங்களில் 3 ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் ஏறத்தாழ 90 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 6.45 லட்சம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என சுகாதாரத்துறையினருக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளார். இதற் கிடையே தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தொய் வாக காணப்படும் மாவட்டங்களில் திருப்பத்தூர் மாவட்டமும் அடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், கதிராமங்கலம் ஊராட்சி யில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது, அங்குள்ள மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும், தினசரி எத்தனை நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன, மக்களிடம் போதிய ஒத்துழைப்பு உள்ளதா? என கேட்டறிந்தார்.
இது குறித்து செய்தியாளர் களிடம் ஆட்சியர் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் நட மாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஒவ்வொரு ஊராட்சியாக சென்று ஆதார் எண்களை ஆய்வு செய்து, 18 வயது கடந்தும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்களை கண்டறிந்து அவர் களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இக்குழுவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தை மாற்றிக்காட்ட பொதுமக்கள் தாமாக முன் வந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல, சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் தினசரி 20 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வட்டார மருத்துவ அலுவலர்கள் உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், பொதுமக்கள் வெளியே வரும் போது முகக்கவசம் அணிந்து வரவேண்டும்’’. என்றார். அப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் உட்பட பலர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT